Monday, November 30, 2020




காட்சி : மேல உள்ள படம் 

மண் தரையில் காதல் கொண்டால் மற்றவர்கள் பார்பார்கள் என்றெண்ணி - மரக்கிளையில் 

வெண் பூக்கள் மத்தியில் காதல் கொண்டனவோ மயில்கள்! 

சாட்சிக்கு வண்ணத்து பூச்சியோ !!!

                                                                                                                                       -விசாகன் 

Wednesday, July 15, 2020

என் கவிதை தளம்

                                               இரண்டாம் கவிதை

காட்சி :
      
          மலை சாலை. சாலையின் குறுக்கே  தாய் யானையும் குட்டி யானையும்  கடந்து செல்கிறது . அப்படி செல்லும் போது  தடுப்பு சுவரை குட்டி யானையால் கடக்க முடியவில்லை . அப்போது  தாய் யானை தன் குட்டிக்கு சுவரை எப்படி கடப்பது என்று சொல்லிகுடுத்து அழைத்து செல்கிறது .


தலைப்பு : வாழக்கை வாழ்வதற்கே !



பாதையில் வரும் தடைகள் ஆயிரம் 
பக்குவமாய் கடந்தால்  வரும் கோடி இன்பம்
பரந்து விரிந்த கானகத்தை ஆள 
பார்த்து மேலேறி வா மகனே !!!

வாழக்கை வாழ்வதற்கே " !!!

                                                                                                    - விசாகன் 

என் கவிதை தளம்

முதல் கவிதை
காட்சி :
 
       அடை மழையில் விரைவாக செல்லும் மகிழுந்து. உள்ளே இசைத்தட்டில் ஆனந்த ராகம்.


தலைப்பு                                  போட்டி 


மழையோ ஜோவென்று 
மகிழுந்தோ விர்ரென்று  
இசையோ சாரலென்று 
            நடக்கிறதோ போட்டியின்று !!!

                                                                                                                                          - விசாகன்